பிரதமர் மோடியுடன் அஸ்ஸாம் முதல்வர் சந்திப்பு!
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரதமர் நரேந்திர மோடியை புது தில்லியில் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக முதல்வரின் எக்ஸ் தளப் பதிவில்,
புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
சமூக-பொருளாதார குறி காட்டிகளில் அஸ்ஸாமின் முன்னேற்றங்கள் மற்றும் முக்கிய நலத்திட்டங்களின் நிறைவுற்ற தன்மை குறித்து அவருக்கு விளக்கினார்.
அஸ்ஸாம் மக்களின் சார்பாக செப்டம்பர் 8ஆம் தேதி பிரதமரை வரவேற்க உள்ளோம். இது நமது மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் ஒரு தருணமாக இருக்கும்.
பாரத ரத்னா டாக்டர் பூபன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையும், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகரில் நாட்டின் முதல் பயோ-எத்தனால் ஆலையை அர்ப்பணித்து, அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.