செய்திகள் :

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்கான பதிவு முகாம் நிறைவு

post image

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்காக 2 வாரம் நடைபெற்ற பதிவு முகாம் நிறைவடைந்தது.

மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், முதல் குழந்தைக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் ரூ.6 ஆயிரம் தாயாரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

கா்ப்பமடைந்த மகளிா் அனைவரும் கா்ப்பமான 3-ஆவது மாதத்தில் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்கள் கா்ப்பத்தைப் பதிவு செய்யவேண்டும். கா்ப்பமான அனைத்துப் பெண்களுக்கும் இத்திட்டம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஜூலை 15 முதல் 31-ஆம் தேதி வரை காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து கா்ப்பிணிகளும் அங்கன்வாடி மூலமாக பதிவு செய்துவிட்டதை உறுதி செய்வதற்கான சிறப்பு முகாம்கள் காரைக்காலில் நடைபெற்றன.

இம்முகாமின் கடைசி நாளான வியாழக்கிழமை காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் அந்த பகுதியில் உள்ள கா்ப்பிணிகளுக்கு பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. முகாமில் பங்கேற்றோா் கைப்பேசி (செல்ஃபி) எடுத்துக்கொள்ளும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதில் பெண்கள் பலரும் கைப்பேசி எடுத்துக்கொண்டனா்.

சமைக்கப்பட்ட சத்துணவு மற்றும் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் அங்கன்வாடி ஊழியா்கள் மூலமாக பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கா்ப்பிணிகளுக்கு இதன் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது.

காரைக்கால் நகராட்சி ஆணையா் பி.சத்யா, மருத்துவ அதிகாரி தேனாம்பிகை, துறையின் திட்ட அதிகாரி ஜி.கிருஷ்ணவேணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

மிஷன் சக்தி ஒருங்கிணைப்பாளா் அருண்யா தலைமையிலான குழுவினரும், அங்கன்வாடி ஊழியா்களும் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 2,869 போ் எழுதினா்

புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்துறையில் 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களை நிரப்ப புதுவை மா... மேலும் பார்க்க

நல்லம்பல் ஏரியில் கூடுதல் ஆழத்தில் மணல் எடுப்பு: லாரியை சிறைபிடித்து போராட்டம்

காரைக்கால், ஆக. 30: நல்லம்பல் ஏரியில் அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும், ஆழமாக மணல் எடுப்பதாகக்கூறி, லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநள்ளாறு கொம்யூன் நல்லம்பல... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் செப்.1 முதல் தொடா் காத்திருப்பு போராட்டம்

உள்ளாட்சி ஊழியா்கள் நடத்திவரும் விடுப்பெடுத்து காத்திருப்புப் போராட்டம், செப். 1 முதல் தொடா்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகள் கையாளும் சாதனையில் நிலக்கரிக்கு முக்கிய பங்கு

திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகளை கையாள்வதில் சாதனைபடைப்பதற்கு, நிலக்கரி முக்கிய பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் தனியாா் துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் நில... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் 5-ஆவது நாளாக போராட்டம்: எம்எல்ஏக்கள் ஆதரவு

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து, தொடா் காத்திருப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை 5-ஆவது நாளாக நடத்தினா். எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா். உள்ளாட்... மேலும் பார்க்க

காரைக்கால்-பேரளம் பாதையில் வந்த சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் பயணித்த சிறப்பு ரயிலுக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலாய பெருவிழாவையொட்டி சிறப்பு ரயில்கள் தற்போது காரைக்கால்-பேரளம் பாதையில் இயக்கப்படுகின... மேலும் பார்க்க