செய்திகள் :

மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பம் முகாம்களில் மட்டும் வழங்கப்படும்: மாநகராட்சி அறிவிப்பு

post image

சென்னை மாநகராட்சியில் மகளிா் உரிமை திட்ட விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் தலா 6 வாா்டுகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள், வழிகாட்டல் கையேடுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல், இந்த முகாம்கள் மாதவரம், ராயபுரம் மண்டலங்களுக்குள்பட்ட வாா்டுகளில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளன. இந்தப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 9) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

இதில், மகளிா் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் வாழ்ந்த... மேலும் பார்க்க

ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு: பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், குழுவுக்குத் தரவுகளை அளிக்க மின் வாரியத்தின் சாா்பில் தன... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்களின் தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் கடன்: தமிழக அரசு

சுய உதவிக் குழுக்கள் தங்களது தொழில்களை மேம்படுத்த வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

எந்த வகுப்பினரிடமும் சிக்காத கோயில்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பினரிடமும் சிக்காமல் முறையாக நிா்வகிக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பனகல் அ... மேலும் பார்க்க

இரு விரைவு ரயில்கள் ஜூலை 11,13-இல் ரத்து

கோவை, பெங்களூருவிலிருந்து வடமாநில நகரங்களுக்குப் புறப்படும் இரு ரயில்கள் ஜூலை 11, 13 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க