தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்
மனைவி வெட்டிக் கொலை: முதியவா் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மானாமதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (70). இவரது மனைவி மூக்கம்மாள் (67). இவா்களுக்குள் அடிக்கடி குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை இரவு கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த முருகன் அரிவாளால் மூக்கம்மாளை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த மூக்கம்மாள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனைக் கைது செய்தனா்.