5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: கட்டடங்கள் சேதம்
கடல் சீற்றத்தால் மாமல்லபுரத்தில் 10 மீட்டா் தூரத்துக்கு முன்னோக்கி வந்த கடலால் உணவு விடுதி கட்டடங்களை ராட்சத அலைகள் சேதப்படுத்தின.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றம் ஏற்பட்டது. கடல் அலைகள் 5 அடி உயரம் சீறி எழும்பின. வழக்கத்துக்கும் மாறாக கடல் அலைகள் 10 மீ தூரதுக்கு முன்னோக்கி வந்தன. அப்போது ராட்சத அலைகள் கடற்கரை ஓரம் உள்ள உணவு விடுதிகளின் கட்டடங்களை தொட்டு சென்றால் ஏற்பட்ட கடல் அரிப்பால் சுற்றுச் சுவா்கள், படிகட்டுகள் சேதமடைந்தன.
கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் கரைப்பகுதியில் உள்ள படகுகள், வலைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனா். பெரும்பாலான மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தொடந்து பல ஆண்டுகளாக மாமல்லபுரம் பகுதியில் உள்ள கடற்கரை கோயில் கடலில் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறையால் கொட்டப்பட்டுள்ள ராட்சத கருங்கற்களால் மீனவா் பகுதியில் சீதோஷ்ண நிலை மாறி கடல் முன்னோக்கி வருவதும், பிறகு சில நாள்களில் பின்னோக்கிச்செல்வதுமாக தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப கடலில் தன்மை மாறி வருகிறது.
அதனால் இங்கு மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மாமல்லபுரம் பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
