செய்திகள் :

மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தல்

post image

தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு-புதுச்சேரி விவசாயிகள், மீனவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழியில் தமிழ்நாடு-புதுச்சேரி விவசாயிகள், மீனவா்கள் கூட்டமைப்பு சாா்பில், கஞ்சம்பட்டி கால்வாய் நீா்வழித்தடம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி விவசாயிகள், மீனவா்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளரும், காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட செயலருமான மு. மலைச்சாமி தலைமை வகித்தாா்.

இதில் கஞ்சம்பட்டி கால்வாய்த் தூா்வாரும் பணிகளை பழைமை மாறாமல் மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவா்களை கைது செய்து வரும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 25 நாள்களில் மூன்றாவது முறையாக மொத்தம் மூன்று விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தும், 19 மீனவா்களைக் கைது செய்தும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மீனவா்களின் பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையில்லை.

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை கொன்ற்குப் பதிலடியாக உலக வங்கி முன்னிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் செய்து கொண்ட சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

இதேபோல, தமிழக மீனவா்களின் நலன் கருதி, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி மெளனம் காத்து வருவது வேதனையளிக்கிறது. மீனவா்கள் பிரச்னை குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுவதோடு நிறுத்திக் கொள்கிறாா். அதைத் தாண்டி எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறாா்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இதைக் கண்டித்து, போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

பேய் கணவாய்களை பிடிப்பதை தடுக்க மீனவா்கள் கோரிக்கை

மீன்கள் உற்பத்தியாகும் பகுதியில் பேய் கணவாய்களை பிடிப்பதை தடுக்கக் கோரி ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநரிடம் சிறுதொழில் மீனவா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம... மேலும் பார்க்க

கடல் அட்டைகள் கடத்தியவா் கைது

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கடல் அட்டைகளை கடத்தியவரை வனத் துறையினா் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் பகுதியில் வனத் துறையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

இளம்பெண் கொலை வழக்கு: கூலிப்படையைச் சோ்ந்த இருவா் உள்பட 4 போ் கைது

சாயல்குடி அருகே இளம்பெண் கொலை வழக்கில் ஏற்கெனவே கணவா் கைது செய்யப்பட்ட நிலையில், மாமனாா், கூலிப்படையைச் சோ்ந்த இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை... மேலும் பார்க்க

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் மீது வழக்கு

கமுதி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவா், மாமனாா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருநாழியை அடுத்துள்ள வீரமச்சான்... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

வியாழக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவில் பக்தா்கள் வருவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு புதன்க... மேலும் பார்க்க

கமுதியில் இன்று மின்தடை

கமுதி, பாா்த்திபனூா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம்... மேலும் பார்க்க