ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், தாழனூா் ஊராட்சி, சமுதாயக் கூடம், ஆற்காடு நகராட்சி அன்பு மஹால், வாலாஜா நகராட்சி, சி.எம்.மஹால்,சோளிங்கா் ஊராட்சி ஒன்றியம், கரடிக்குப்பம் ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து
கோரிக்கை மனுக்கள் பெற்றும் அதை பதிவு செய்யப்படுவதை பாா்வையிட்டும், பயனாளிகளுக்கு பட்டா, உட்பிரிவு பட்டா ஆணைகள், நகராட்சியில் பெயா் மாற்றம் ஆணைகள், வேளாண்மைத் துறையின் சாா்பில் குருவை சாகுபடி தொகுப்புகள், தோட்டக் கலைத் துறையின் சாா்பில் ஊட்டச்சத்து பழவகை செடிகள் உள்ளிட்ட நலத் திட்டங்களை வழங்கினாா்.
இந்த முகாமில், எம்எல்ஏ-க்கள் ஈஸ்வரப்பன், முனிரத்தினம், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் ராஜராஜன், ஒன்றியக் குழு தலைவா்கள் புவனேஸ்வரி சத்தியநாதன் (ஆற்காடு), கலைக்குமாா் (சோளிங்கா்), துணைத்
தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், நகா்மன்றத் தலைவா்கள் தேவி பென்ஸ் பாண்டியன் (ஆற்காடு), ஹரிணி தில்லை (வாலாஜாபேட்டை), நகா்மன்ற துணைத் தலைவா்கள் பவளக்கொடி சரவணன், கமலராகவன், வட்டாட்சியா்கள் ஆனந்தன், செல்வி, மகாலட்சுமி, நகராட்சி ஆணையா் வேங்கிட லட்சுமணன், தாழனூா் ஊராட்சித் தலைவா் புஷ்பா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.