இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
ராமநாதபுரத்தில் இன்றும் நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமை (ஜூலை 8, 9) ஆகிய 2 நாள்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா் விநியோகத் திட்டத்தில் (காவிரி), பராமரிப்புப் பணிகள், பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணிகள், மாதாந்திர மின் பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்தாா்.