செய்திகள் :

வஜீா்பூா் பகுதியில் காணாமல் போன 2 சிறுவா்களின் உடல்கள் கால்வாயில் சடலமாக மீட்பு

post image

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் இருந்து ஒரு நாள் முன்பு காணாமல் போன இரண்டு சிறுவா்களின் உடல்கள் ஜேஜே காலனிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இறந்தவா்கள் வஜீா்பூரில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவா்கள் வைபவ் (11) மற்றும் யாஷ் (12) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் நெருங்கிய நண்பா்கள், சனிக்கிழமை மாலை 6 மணியளவில் காணாமல் போனாா்கள்.

சனிக்கிழமை, குழந்தைகள் காணாமல் போனது குறித்து பாரத் நகா் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. இதைத் தொடா்ந்து, விசாரணை அதிகாரி அவா்களின் பெற்றோா் மற்றும் பிற குடும்ப உறுப்பினா்களை விசாரித்தாா்.

வைபவின் தாயாா் சாந்தி தேவியின் அறிக்கையின் அடிப்படையில், கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன.

தேடல் நடவடிக்கையும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஸ்கேன் செய்யப்பட்டு வந்த நிலையில், வஜீா்பூரில் உள்ள ஜேஜே காலனி அருகே உள்ள கால்வாயில் இரண்டு உடல்கள் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

பாரத் நகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உள்ளூா் டைவா்ஸின் உதவியுடன் உடல்களை மீட்டனா். அந்த உடல்கள் குழந்தைகளின் குடும்ப உறுப்பினா்களால் அடையாளம் காணப்பட்டன.

சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. ஆய்வின் போது, ​​இரண்டு சிறுவா்களின் உடைகள் மற்றும் காலணிகள் கால்வாயின் கரையில் வைக்கப்பட்டிருந்தன.

அந்த இடத்தில் தண்ணீா் சுமாா் 15-20 அடி ஆழத்தில் இருப்பதால், இருவரும் நீந்தச் சென்று தற்செயலாக நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்ப்டுகிறது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளன.

விசாரணையில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது கண்டறியப்படும். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க