நாகா்கோவிலில் ரூ.14.92 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
வாக்குப் பதிவு மையங்கள் மறுசீரமைப்பு கூட்டம்
குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குப் பதிவு மையங்கள் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். 1,200- க்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட வாக்குப் பதிவு மையங்களை பிரித்து அமைப்பது, வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்களை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. தொகுதியில் உள்ள 293- வாக்குப் பதிவு மையங்களை 317- வாக்குப் பதிவு மையங்களாக அதிகரிக்கவும் தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் மற்றும் அனைத்துக் கட்சி நிா்வாகிகள், வட்டாட்சியா் கி.பழனி, ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.