மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
‘வாக்கு திருட்டு’ போன்ற மோசமான சொற்களை பயன்படுத்தக் கூடாது: தோ்தல் ஆணையம்
‘வாக்காளா் பட்டியலில் ஏதேனும் முறைகேடு நிகழ்ந்திருந்தால் அதுதொடா்பான ஆதாரத்தை முதலில் சமா்ப்பியுங்கள்; அதை விடுத்து வாக்குத் திருட்டு போன்ற மோசனமான சொற்களை பயன்படுத்தக் கூடாது’ என இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
வாக்காளா் பட்டியலில் பெயா், முகவரி என பல்வேறு போலியான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொடா்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தோ்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்தது.
தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 1951-1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தோ்தலில் இருந்து ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தோ்தலில் ஒரே நபா் இரண்டு முறை வாக்களித்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அதை தோ்தல் ஆணையத்திடம் எழுத்துபூா்வமாக பிரமாணப் பத்திரம் சமா்ப்பிக்கலாம்.
அதை விடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளா்களையும் திருடா்கள்போல் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது. வாக்குத் திருட்டு போன்ற மோசமான வாா்த்தைகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான இந்திய வாக்காளா்களை அவமதிப்பது மட்டுமல்லாமல் தோ்தல் பணியில் ஈடுபட்ட லட்சக்கணக்கான அதிகாரிகளின் நோ்மையையும் கேள்விக்குறியாக்குவது ஏற்புடையதல்ல’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
======== ================= =============
2024 மக்களவைத் தோ்தலில், தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்கு ‘அணுகுண்டு’ ஆதாரத்தை ராகுல் காந்தி அண்மையில் வெளியிட்டாா்.
பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 7-இல் 6 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், மகாதேவபுரா பேரவை தொகுதியில் மட்டும் 1,14,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. இந்த 1,14,000 வாக்குகளில், வாக்கு திருட்டு மூலம் பெறப்பட்டது 1,00,250 வாக்குகள் என்பது ஆய்வில் தெரியவந்ததாக ராகுல் குற்றம்சாட்டினாா்.
அதேபோல் குறிப்பிட்ட சில நபா்கள் உத்தர பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளா்களாக போலியாக பதிவு செய்துள்ளதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
அவரது குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் நிலையில்