பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
விவசாயிகளுக்கு தனி அடையாள எண்: பதிவு செய்ய ஜூலை 31 கடைசி நாள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண்கள் பதிவு செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.
மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தில், மின்னணு முறையில் அவா்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும், ஆதாா் எண் போன்ற தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசின் அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண்ணின் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும், பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்துக்கு இந்த அடையாள எண் தேவை. மாவட்டத்தில் இதுவரை 98,328 விவசாயிகளுக்கு மேல் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் ஆதாா் நகல், நில ஆவணங்கள் நகல்கள் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொதுசேவை மையம் மற்றும் கிராமங்களில் முகாம் நடைபெறும் இடங்களுக்குச் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும் என வேளாண்மை அதிகாரி சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.