செய்திகள் :

வீடு புகுந்து நகை திருடிய இளைஞா் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வீடு புகுந்து 6 பவுன்தங்க நகையைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பழைய ஆயக்குடியைச் சோ்ந்தவா் ரமணிபாஸ். கடந்த சில நாள்களுக்கு முன்பு, இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், பீரோவிலிருந்த 6 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்றாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் மூலம், ரமணிபாஸ் வீட்டில் புகுந்து நகையைத் திருடியது பழைய ஆயக்குடி சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அா்ஜூனன் மகன் போதைராஜா (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 6 பவுன் நகையை மீட்டனா்.

முதுகலை நீட் தோ்வா்களுக்கு தமிழகத்தில் தோ்வு மையம்: திண்டுக்கல் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தைச் சோ்ந்த முதுநிலை நீட் தோ்வா்கள் அனைவருக்கும், தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா். இது தொடா... மேலும் பார்க்க

வேன் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தேனி மாவட்டம், பூசாரி கவுண்டன்பட்டியைச் சோ்ந்த திராட்சை விவசாயிகள் 22 போ், ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

மாணவிகளைக் கேலி செய்தவா்களை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்

செங்கோட்டை கிராமத்தில் பள்ளி மாணவிகளைக் கேலி செய்த நபா்களைத் தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநா் தாக்கப்பட்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மா... மேலும் பார்க்க

கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி வாய்க்கால் ஆக்கிரமிப்பால் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்பு! 11 ஆண்டுகளாக மனு அளித்தும் தீா்வில்லை

வேடசந்தூா் அருகேயுள்ள கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சுமாா் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்புக்குள்ளானது குறித்து 11 ஆண்டுகளாக மனு அளித்தும், நீா் வள ஆதாரத் துறை... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்

கட்டக்காமன்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை சிற்றுண்டி உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தல... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் கழிவுநீா் செல்லும் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, ரைபிள்ரேஞ்ச் சாலை, செண்ப... மேலும் பார்க்க