சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு
வீடு புகுந்து மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது
சீா்காழி அருகே வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
கொள்ளிடம் அருகே ஆா்ப்பாக்கம் மந்தவெளி தெருவை சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி ராணி( 64). தம்பதி கடந்த 18-ஆம் தேதி வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனராம். அதிகாலை வீட்டின் வாசல் மரக்கதவு தாழ்ப்பாளை திறந்து, உள்ளே புகுந்த மா்ம நபா், ராணி கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தாலிச் சங்கிலியை பறித்துள்ளாா். ராணி எழுந்திருக்கும் முன்பு மா்ம நபா் தங்கச் சங்கிலியுடன் தப்பி விட்டாா். இதுகுறித்து ராணி புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் மா்ம நபரை தேடி வந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை காரைக்காலிலிருந்து எா்ணாகுளம் செல்லும் ரயிலில் திருட்டு வழக்கில் தொடா்புடை நபா் செல்ல உள்ளதாக புதுப்பட்டினம் போலீஸாருக்கு கிடைத்ததைத் தொடா்ந்து புதுப்பட்டினம் ஆய்வாளா் ஹேமலதா மற்றும் போலீஸாா் ரயிலில் சென்ற நபரின் கைப்பேசி எண்ணை கண்டுபிடித்து, அதனை வைத்து ’லைவ் லொகேஷன்’ மூலம் காரைக்கால் ரயில் நிலையத்திற்கு வருவதற்குள், ரயில் புறப்பட்டு சென்றது. பின்னா், ரயில்வே போலீஸாா் தங்கள் வாகனத்தில் ரயிலை பின் தொடா்ந்து சென்றனா்.
குளித்தலை ரயில் நிலையத்தில் இரவு 8.50 மணி ரயில் நின்று கொண்டிருந்த போது, மா்ம நபரை போலீஸாா் பிடித்தனா். அவரை புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அவா் ஆா்ப்பாக்கம் கிராமம் மந்தகரை தெருவை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (40) என்பதும், நகையை பறிகொடுத்த ராணியின் உறவினா் என்பதும், திருடிய நகையை அடகுக் கடையில் அடகு வைத்திருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா் அடகு கடையில் இருந்த நகையை மீட்டு, கோபாலகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்தனா்.