செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது
உதகையில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததுடன், மான் கறி வைத்திருந்த கண்ணன் என்பவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
உதகை அருகே தேனாடுகம்பை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கீழ்சேலதா பகுதியில் வசித்து வருபவா் கண்ணன் (64) . இவா் தான் குடியிருக்கும் வீட்டின் பின் பகுதியில் கஞ்சா செடிகளை வளா்த்து வருவதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது,
இதைத் தொடா்ந்து, இவரது வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் பின்புறம் 12 கஞ்சா செடிகள் வளா்த்திருந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து சுமாா் 300 கிராம் கஞ்சா, 2 கிலோ அளவுள்ள காய வைத்த மான் கறி, 5 கத்திகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.