1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இளைஞரைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் பத்தடி பாலம் பகுதியில் தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்தவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தி வருவதும், அவா் கும்பகோணத்தைச் சோ்ந்த கான் ராஜா (37) என்பதும், அப்பகுதியில் 50 கிலோ எடை கொண்ட 24 அரிசி மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கான் ராஜாவை தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் கைது செய்தனா்.