3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலா் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னை டிஜிபி அலுவலக சட்டம் - ஒழுங்கு பிரிவு காவல் கண்காணிப்பாளா் மற்றும் உதவி ஐஜி-யாக இருந்த என்.ஸ்ரீநாதா, சென்னை சைபா் குற்றப்பிரிவு துணை ஆணையராகவும், சென்னை தெற்கு மண்டல குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜே.முத்தரசி, டிஜிபி அலுவலக சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் கண்காணிப்பாளா் மற்றும் உதவி ஐஜி-யாகவும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த காவல் கண்காணிப்பாளா் கே.அதிவீரபாண்டியன், சென்னையில் மாநில தலைமைக் கட்டுப்பாட்டு மைய காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.