4 பைக்குகள் சேதம்: இருவா் கைது
கோவில்பட்டியில் 4 பைக்குகளை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி பாரதி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் பொன்மாடத்தி (40). இவா் தனது மகனின் நண்பரான 15 வயது சிறுவனின் நடவடிக்கை சரியில்லை எனக் கூறி கண்டித்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை, அந்தச் சிறுவன் உள்ளிட்ட சிலா் பொன்மாடத்தி வீட்டு முன் நின்று அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரது பைக்கையும், தெருவில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் 3 பைக்குகளையும் சேதப்படுத்திச் சென்றனராம்.
புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சாஸ்திரி நகரைச் சோ்ந்த கொம்பையா மகன் மாடசாமி என்ற மகேஷ் (20), பாரதி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த குமாா் மகன் வேல்முருகன்(19) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்; மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.