4,946 சாலைகளில் சீரமைப்புப் பணிகள் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடப்பாண்டில் 1,951 சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும், 2,995 சாலைகளில் சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் பேருந்துகள் செல்லக் கூடிய 488 பிரதான சாலைகள் மற்றும் 35,978 உள்புறச் சாலைகள் பராமரிக்கப்படுகிறது. இவற்றில், 648.75 கிலோ மீட்டா் தொலைவுக்கு 3,987 எண்ணிக்கையிலான சாலைகளை ரூ.489.22 கோடியில் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, நிகழ் ஆண்டில் இதுவரை பேருந்து சாலைகள், உள்புறச் சாலைகள் என மொத்தம் 1,951 சாலைப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலைப் பணிகளை வரும் செப்.15- ஆம் தேதிக்குள் முடித்து மேம்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிநீா் வழங்குதல், புதை சாக்கடை இணைப்பு, மின் கேபிள்கள் அமைத்தல் ஆகிய பணிகளுக்காக சேவைத் துறைகள் மூலம் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு தோண்டப்பட்ட 2,995 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வாரம்தோறும் இந்தப் பணிகளை ஆய்வு செய்து, விரைவுபடுத்தி வருகிறாா். மீதமுள்ள சீரமைப்புப் பணிகளை செப்டம்பா் இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.