இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
``இந்தியாவுடனான மோதலில் சீனா உதவவில்லை; எங்கள் திறமை தான்..'' - பாகிஸ்தான் ராணுவத் தளபதி சொல்வதென்ன?
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி, இந்தியாவில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது இந்திய அரசு.
அதன் ஒரு பகுதியாக ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பழிவாங்கல் நடவடிக்கையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவே 4 நாள்கள் கடும் மோதல்கள் நடைபெற்றன.

இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு சீனாவிடம் இருந்து உளவுத் தகவல்கள் கிடைத்ததாக இந்தியா தரப்பில் கூறப்பட்டு வந்த சூழலில், அது உண்மைக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர்.
இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையில், பாகிஸ்தானின் இறையாண்மையை சீர்குலைக்கும் எந்த ஒரு எதிர்பாராத தாக்குதலுக்கும் கட்டுப்பாடுகள் இல்லாத விரிவான உறுதியான பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார் அவர்.
இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் பன்யானம் மர்சூஸ் நடவடிக்கை (Operation Bunyanum Marsoos) என அழைக்கப்படுகின்றன.

இந்த தாக்குதலில் வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்டதாகக் கூறப்படுவது தவறானது என்றும், நீண்ட நாள்கள் உழைப்பின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் ஏற்படுத்திக்கொண்ட திறன்களை ஒப்புக்கொள்ள மறுப்பதனாலேயே இந்த பொய்கள் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார் அவர்.
இரண்டு நாடுகளுக்கு இடையிலான போரில் மூன்றாவது நாட்டின் பெயரைச் சேர்ப்பது இந்தியாவின் 'முகாம் அரசியல்' முயற்சி என விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், "ஊடக சொல்லாட்சியோ, இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பரமான ஆயுதங்களோ அல்லது அரசியல் கோஷங்களோ போர்களை வெல்வதில்லை. நம்பிக்கை, தொழில்முறை திறன், செயல்பாட்டு தெளிவு, நிறுவன வலிமை மற்றும் தேசிய உறுதிப்பாடு ஆகியவையே வெற்றியைத் தீர்மானிக்கின்றன" என்றும் கூறியுள்ளார்.