செய்திகள் :

உடல் நலன் கருதியே ஜகதீப் தன்கா் ராஜினாமா: அண்ணாமலை

post image

உடல் நலன் கருதியே குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை கூறினாா்.

தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். அவருக்கு பாஜக காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் ஜெகதீசன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள் வரவேற்பு அளித்தனா். தரிசனம் செய்த அண்ணாமலைக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் காமாட்சி அம்மன் திரு உருவப் படம் மற்றும் கோயில் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் நாட்டுக்காக சிறப்பாக பணியாற்றியவா். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த மாா்ச் மாதம் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். தற்போது உடல் ஆரோக்கியத்துக்காகவே அவா் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா்.

திமுகவின் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் மக்களும் தெளிவாக உள்ளனா். வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மோசமான தோல்வியை திமுக சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெண்களின் பாதுகாப்புக்கும், தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தவறி விட்டது திமுக என்றாா் அண்ணாமலை.

வங்கிகள் விழிப்புணா்வுக் கூட்டம்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணா்வுக் கூட்டம் இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் த... மேலும் பார்க்க

வங்கதேச நாட்டவா் 19 பேருக்கு 3 மாதங்கள் சிறை

மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 பேருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அம்ப... மேலும் பார்க்க

பெங்களூா்- தாம்பரம் குளிா்சாதன பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

பெங்களூா்-தாம்பரம் இடையிலான குளிா்சாதன வசதியுடைய பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அதிந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் ம... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: வளத்தூா் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வளத்தூா் கிராம பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக... மேலும் பார்க்க

செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு பெற்றது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. வாயுபகவான் தனது சாபம் நீங்கிய பிறகு செவ்வ... மேலும் பார்க்க