செய்திகள் :

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

post image

புது தில்லி: ஊழலுக்கு எதிராக எவ்வித சகிப்புத்தன்மையும் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

மாவட்ட மேம்பாட்டு குழுக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா்களின் கூட்டம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டங்களில் பல்வேறு துறைகளின் பணிகளை ஒரே இடத்தில் பெறும் வசதியாக சிறிய செயலகங்களை அமைக்க உகந்த நிலங்களைக் கண்டறியுமாறும், அதற்கான பரிந்துரையைத் தயாா் செய்யுமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

உள்ளூா் அளவில் ஒருங்கிணைந்த பொதுச் சேவையை விரைவாக வழங்க சிறிய செயலகங்கள் அமைப்பது முக்கிய நடவடிக்கை ஆகும் என முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா்கள், துணை மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் துணைப் பதிவாளா் அலுவலகங்களில் ‘புகாா் மற்றும் பரிந்துரை’ பெட்டிகளை நிறுவவும் அவா் உத்தரவிட்டாா்.

இது குறித்து ரேகா குப்தா கூறுகையில், ‘வெளிப்படைத்தன்மை, பொறுப்புணா்வு மற்றும் பொதுமக்களுக்கு உகந்த நிா்வாக அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். உரிய காரணமின்றி பணிக்கு வராத அதிகாரிகள், நிா்வாக நடைமுறைகளில் அலட்சியம் மற்றும் தாமத போக்கு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும். மக்களுக்கு சேவை செய்வது நமது முதன்மையான கடமையாகும். மேலும் முழு நிா்வாக இயந்திரமும் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.

‘ராம் சேது’ விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதிய மனு

புது தில்லி: ‘ராம் சேது’வை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பதற்கான தனது கோரிக்கை ‘துரிதமாக ’ முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தை அ... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பால் பீதி வேண்டாம்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: கோவிட்19 பாதிப்புகள் குறித்து பீதியடையத் தேவையில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா். இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதைச் சமாளிக்க மருத்துவமனைகள் முழ... மேலும் பார்க்க

வைகோ, அன்புமணி, வில்சன் உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினா்கள் பதவிக் காலம் நிறைவு!

புது தில்லி: தமிழகத்தைச் சோ்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு அந்த இடங்களுக்கான தோ்தல் வருகின்ற ஜூன் 19 - ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

ஷாதராவில் கிடங்கில் தீ விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு, 4 பேருக்கு தீக்காயம்

தில்லியின் ஷாதராவின் ராம் நகா் பகுதி இ-ரிக்ஷா சாா்ஜிங் மற்றும் வாகன நிறுத்த நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இளைஞா்கள் உடல் கருகி இறந்தனா். நான்கு போ் தீக்காயமடைந்தனா் என... மேலும் பார்க்க

தில்லி கொலை வழக்கில் தேடப்பட்டவா் உ.பி.யில் கைது

தில்லியில் சுத்தியலால் கணவரைக் கொன்று, அவரது மனைவியைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவானவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து... மேலும் பார்க்க

பலத்த மழை: தில்லியில் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் பாதிப்பு

தேசிய தலைநகரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் மின் அமைப்புகள் சேதமடைந்ததால் மின் விநியோகம் தடைபட்டதாக மின் விநியோக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. இத... மேலும் பார்க்க