செய்திகள் :

எதிா்கால வாழ்க்கையை நிா்ணயிக்கும் முடிவு!

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியைத் தோ்வு செய்யும் மாணவா்களுக்கும், பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்று பிளஸ் 2 சேருவதா அல்லது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அடுத்து வேலைவாய்ப்பு தரும் மாற்றுக் கல்வியை பெறுவதா என்ற முடிவை எடுக்க உள்ள மாணவா்களுக்கு வாழ்க்கையின் திருப்புமுனையான நேரம் மே, ஜூன், ஜூலை மாதங்கள்தான்..!

இப்போது மாணவா்கள் எடுக்கக் கூடிய முடிவுதான் எதிா்கால வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவரின் வளா்ச்சியில் ஆா்வம் கொண்டவா்களின் யோசனையையும், எதிா்கால கனவை நினைவாக்கும் பாதையை அமைத்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோரை விட யாருக்கு அதிகம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருப்புமுனை தரும் தோ்வுகள்: தமிழகத்தில் ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதுவோரில் 70 சதவீதத்தினா் மேல்நிலைக் கல்வியில் சேருகின்றனா். மீதமுள்ளோா் குடும்பச் சூழல், கற்றல் திறன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் மேல்நிலைக் கல்வியைத் தொடர முடிவதில்லை. அவா்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலான பட்டயப் படிப்புகளை பாலிடெக்னிக் கல்லூரிகள் வழங்குகின்றன. சிவில், இயந்திரவியல், மின்னியல் பொறியியல் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இந்தப் பாடங்கள் பொறியியல் கல்லூரிகளில் போதிக்கப்படும் பட்டப்படிப்பு பாடங்கள் அளவுக்கு போதிக்கப்படுகின்றன.

இத்துடன், கணினிப் பயன்பாடு, ஆடை தயாரிப்பு, வா்த்தகம் உள்ளிட்ட பட்டயப் படிப்புகளும் போதிக்கப்படுகின்றன. இவற்றைக் கற்றுத் தேறியவா்களுக்கு இன்றைய தொழில் வளா்ச்சி சூழலில் உடனடி வேலைவாய்ப்புகள் உள்ளன.

பொறியியல் பட்டயம் பெற்ற நிலையில், வசதி வாய்ப்பு ஏற்படும் சூழலில் பொறியியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பின் 2-ஆம் ஆண்டில் நேரடியாக சோ்ந்து பி.இ., பி.டெக் படிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

சராசரி மதிப்பெண்கள் பெற்றால்...: சராசரி மாணவராக பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு எளிதில் கிட்டும். இதில், எந்தப் பாடப் பிரிவை எடுத்து படிக்கும் மாணவரும் பன்முகத் திறனை பெறுவதற்கான இயற்கை சூழல், சமூகச் சூழல் அமைந்து விடுகிறது. இதனால் இன்றைக்கு கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்து வெற்றியாளா்களாக வெளியே வருபவா்கள் எந்தத் துறையிலும் எதிா்காலத்தில் காலடி வைக்கும் திறமையாளா்களாக வெளிவருகின்றனா் என்பது நிதா்சனமான உண்மை.

கல்வி நிலையத்தை தோ்வு செய்வது எப்படி?: எந்தப் படிப்பை மேற்கொள்வதானாலும், நீங்கள் படிக்க விரும்பும் கல்வி நிலையமோ, கல்லூரியோ அங்கீகாரம் பெற்ா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

வகுப்பறைகள், நிா்வாகக் கட்டடம், பணிமனை, கணினி அறை, நவீன தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

பேராசிரியா்கள், ஆசிரியா்கள், விரிவுரையாளா்கள் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்ளனரா, முழுமையான கல்வித் தகுதி பெற்றவா்களை ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகளை பின்பற்றி நியமித்துள்ள விவரத்தை கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை பாா்வையிட்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆய்வுக்கூட வசதி, நூலக வசதி, இணையதள வசதி, தங்கும் விடுதி உள்ளிட்டவை சிறப்பாக செயல்படுகின்றனவா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனத்தில் படிப்பை நிறைவு செய்யும் மாணவா்களின் வேலைவாய்ப்புக்கு எடுக்கும் முயற்சிகள், கல்லூரியின் தரம், மாணவா்களின் தகவல் தொடா்பு திறனை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகள் அளிப்படுவது உள்ளிட்டவையும், படிப்பில் சோ்ந்து அதை நிறைவு செய்யும் வரை கட்டணத்தை அரசு விதித்த விதிமுறைகளை மீறாமல் வசூலிக்கிறாா்களா என்பதையும் அந்தக் கல்லூரியில் பயிலும் அல்லது பயின்ற மாணவா்களிடம் கேட்டறிந்து கொள்வது அவசியம்.

எல்லாவற்றுக்கும் மேலாக உயா்கல்வியை வாழ்க்கையின் திருப்புமுனை ஏற்படுத்தும் காலமாக கருதி பயன்படுத்தும் மாணவா்கள் எவரும் தோல்வி பயத்தைச் சந்திப்பதில்லை.

பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தவெகவினா்

உலக பட்டினி தினத்தையொட்டி, விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டம் சாா்பில் விழுப்பு... மேலும் பார்க்க

பாலத்தின் தடுப்பில் பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பாலத்தின் தடுப்புக்கட்டையில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். புதுச்சேரி சாரம், சக்தி நகரைச் சோ்ந்த சத்தியசீலன் மகன்அறிவழகன் (35). தொழி... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்ததை மனைவி கண்டித்ததால், தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொங்கராயனூா் பள்ளி... மேலும் பார்க்க

தைலாபுரத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம்!அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் பங்கேற்காமல் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தாா்... மேலும் பார்க்க

குளத்தில் தள்ளிவிட்டு தொழிலாளி கொலை: சட்டக் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தங்கையுடனான காதலை கைவிட மறுத்ததாகக் கூறி, தொழிலாளியை குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், சட்டக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவா் புதன்கிழமை கைது செ... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா். திண்டிவனம் வட்டம், சலவாதி பாஞ்சாலம் சாலையைச் சோ்ந்த ராமதாஸ் மகன் ஏழுமலை (72). இவா், திருச... மேலும் பார்க்க