களியக்காவிளை சுடலைமாடசுவாமி கோயிலில் நாளை ஊட்டுப்படுக்கை
களியக்காவிளை அருள்மிகு சுடலைமாடசுவாமி கோயிலில் ஊட்டுப் படுக்கை படையல் விழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது.
இக் கோயிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமைதோறும் ஊட்டுப் படுக்கை படையல் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவையொட்டி காலையில் சுடலைமாடசுவாமி, மாவுஇசக்கி அம்மன், நீலமாடசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் ஊட்டுப்படுக்கை படையல் நடைபெறும். அதைத் தொடா்ந்து மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெறும்.
விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்கிறாா்கள். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.