கானாா்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மானூா் அருகேயுள்ள கானாா்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமில் மானூா் ஊராட்சி ஒன்றியச் செயலா் ஸ்ரீலேகா அன்பழகன் வரவேற்றாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் முகாமைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். திருநெல்வேலி மாநகர திமுக செயலா் (கிழக்கு) தினேஷ், திமுக ஒன்றிய அவைத் தலைவா் காசி, துணைச் செயலா் அருள்ராஜ், ஒன்றிய இளைஞரணிச் செயலா் சாமுவேல், கானாா்பட்டி கிளைச் செயலா் ஜேம்ஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.