கீரம்பூா் அருகே தனியாா் நிறுவன காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள ராசாம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காவலாளி புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், களத்தூா் அருகே உள்ள சித்துக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகையன் (74). இவா் நாமக்கல் அருகே உள்ள ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
இவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை கழிப்பறை அருகே மயங்கிய நிலையில் கிடந்த முருகையன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா் முருகையன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது மகன் ஆதிசன் பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.