செய்திகள் :

குஜராத் பால விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி

post image

குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவின் பத்ரா தாலுகாவில் உள்ள கம்பீரா பாலத்தின் ஒரு பகுதி இன்று(புதன்கிழமை) காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள், இரண்டு பிக்-அப் வேன், ஒரு ரிக்ஷா ஆகியவை ஆற்றில் விழுந்தன.

வாகனங்களில் இருந்தவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர், மீட்புக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்துக்கு முதல்வர் பூபேந்திர படேல், இரங்கல் தெரிவித்துள்ளதுடன் விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மோடி, "குஜராத் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும்" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PM Modi announces ex-gratia Rs 2 lakh for families of deceased, Rs 50,000 for injured for Vadodara bridge collapse accident

நமீபியாவில் மோடி! டிரம்ஸ் வாசித்து குதூகலம்!

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க

யூரியா பயன்பாடு அதிகரிப்பால் மண்வளம் பாதிக்கும் - மத்திய அமைச்சா்

தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அம... மேலும் பார்க்க