குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் சனிக்கிழமைஅடைக்கப்பட்டாா்.
சிப்காட் காவல் சரகப் பகுதியில் கடந்த 7.7.2025இல் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி மடத்தூரைச் சோ்ந்த லிங்கசெல்வன் மகன் அஸ்வின் ஜெயக்குமாா் (21) கைது செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை, சிப்காட் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.