குறுவட்ட இறகுப்பந்து போட்டி: நாமக்கல் குறிஞ்சி பள்ளி சிறப்பிடம்
நாமக்கல்லில் குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன.
இதில், 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் எம்.குருதா்ஷன், எஸ்.ஜெய்ஹரீஷ் ஆகியோா் முதலிடத்தையும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஆா்.எம்.ஷாருக்கேஷ், பி.ரனேஷ்வா் ஆகியோா் இரண்டாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். அந்த மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.