செய்திகள் :

கேரளத்தில் வலுவடையும் பருவமழை: கோழிக்கோடு, வயநாட்டுக்கு ரெட் அலர்ட்!

post image

கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் கோழிக்கோடு மற்றும் வயநாடுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கோட்டயம், எர்ணகுளம், பத்தினம்திட்டா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை எழுந்துள்ளதால், அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் இடுக்கி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், எல்லையோர தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரிக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட்! மேலும் 6 மாவட்டங்களில் கனமழை!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அரசை விமா்சித்து கைதான மாணவிக்கு ஜாமீன்- மகாராஷ்டிர அரசு மீது உயா்நீதிமன்றம் விமா்சனம்

சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து அரசை விமா்சித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய... மேலும் பார்க்க

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்பு: வங்கிகளுக்கு ஆா்பிஐ யோசனை

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்புகளைப் பெறுவது தொடா்பாக பரிசீலிக்குமாறு வங்கிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கேட்டுக் கொண்டது. இது தொடா்பான கருத்துகளை இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: புலி தாக்கி இருவா் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு வேறு சம்பவங்களில் புலி தாக்கி இருவா் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து, சந்திரபூரில் இம்மாதம் புலிகள் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 1... மேலும் பார்க்க

பணிநீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதிய பலன்கள் கிடையாது: மத்திய அரசு

பணிநீக்கம் செய்யப்படும் பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் ஏதும் கிடைக்காத வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பான மத்திய பணியாளா் ஓய்வூதிய விதிகள் -2021 சட்... மேலும் பார்க்க

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை- உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி அல்தாஃப் ஹுசைனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.48,000 அபர... மேலும் பார்க்க

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க