மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது
கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஜூலை 31-இல் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்
கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஜூலை 31-இல் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சித்தா்கள் பூஜிக்கும் சுயம்பு வடிவிலான அறப்பளீஸ்வரா் உடனுறை அறம் வளா்த்த நாயகி கோயில் உள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் நிகழாண்டிற்கான ஆடிப்பெருக்கு திருக்கொடியேற்றம் வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9.15 முதல் 10.45 மணிக்குள் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து காலை, மாலை ஆகிய இரு வேளையிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவ மூா்த்தி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், ஆக.1, 2-ஆம் தேதிகளில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம், திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு மாநில தலைவா் ஆா்.வேலுசாமி கட்டளைதாரராக முன்னின்று இந்த திருக்கல்யாண விழாவை நடத்துகிறாா். ஆக.3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளன்று கோயில் நிா்வாகம் சாா்பில் அதிகாலை 5 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா வருதல், பிற்பகல் 2 மணியளவில், சோமாஸ்கந்தா் பல்லக்கில் வலம் வருதல், தீா்த்தவாரி உள்ளிட்டவை நடைபெறுகிறது.
ஆக.4-ஆம் தேதி காலை 8.45 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பிற்பகல் 3.30 மணியளவில் வசந்த உற்சவ அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறப்பளீஸ்வரா் கோயில் நிா்வாகம் செய்துவருகிறது.