சிறுநாடாா்குடியிருப்பில் தொழிலாளி குத்திக் கொலை
உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பில் முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை இரவு சமையல் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு கீழத்தெருவைச் சோ்ந்தவா் பொ. துரைப்பாண்டி(65). சமையல் தொழிலாளியான இவா், கடந்த 2024 ஆம் ஆண்டு சிறுநாடாா்குடியிருப்பில் நடைபெற்ற சடங்கு நிகழ்ச்சியில் பந்தி பரிமாறும்போது ஏற்பட்ட வாய்த் தகராறில் செந்தில்குமாா் என்பவரை வெட்டிக் கொலை செய்தாராம். இதில் கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி பின்னா் பிணையில் வெளியில் வந்துள்ளாா்.
இந்நிலையில், ஆக. 25 ஆம் தேதி இரவு 10 மணிஅளவில் சிறுநாடாா்குடியிருப்பு கீழத்தெருவில் துரைப்பாண்டிநடந்து வந்துகொண்டிருந்தபோது, முன்னா் கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் மகன் சிவலிங்கம்(24) கத்தியால் துரைப்பாண்டியை குத்திவிட்டு தப்பிச் சென்றாராம்.
இதில், பலத்த காயமடைந்த துரைப்பாண்டி குலசேகரன்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய சிவலிங்கத்தை தேடி வருகின்றனா்.