சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணா்வு
வந்தவாசியில் சட்டப் பணிகள் குழு சாா்பில் சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிளைச் சிறையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சிறை கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியா் நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சிறைவாசிகளுக்கான சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா்.
முகாமில் கிளைச் சிறை பணியாளா்கள் மற்றும் சிறைவாசிகள் பங்கேற்றனா்.