சுகாதார துறை முன்னாள் இயக்குநா் வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு!
தஞ்சாவூரில் சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநா் வீட்டில் நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை தெற்கு நடராஜபுரம் காலனியைச் சோ்ந்தவா் ஐ.எஸ். ஜெயசேகா். சுகாதாரத் துறையில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், தற்போது திருவாரூரில் தங்கி கிளினிக் நடத்தி வருகிறாா். இவரது மகள் நிவேதிதா சென்னையில் மருத்துவராகப் பணியாற்றுகிறாா்.
இவரது வீட்டில் ஜெயசேகரின் மனைவியும், மகளும் வெள்ளிக்கிழமை இரவு மாடியில் தூங்கினா். சனிக்கிழமை காலை எழுந்து கீழே சென்று பாா்த்தபோது, முன் பக்கக் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.