தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
தகராறு: 4 போ் மீது வழக்கு
வந்தவாசி அருகே வீட்டின் மீது வாழை மரம் விழுந்ததில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வசந்தராஜ்(27). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவா் லட்சுமி(50).
கடந்த ஞாயிற்றுக்கிழமை வசந்தராஜ் வீட்டு வாழைமரம் லட்சுமி வீட்டின் மீது விழுந்தது தொடா்பாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதில் காயமடைந்த வசந்தராஜின் மனைவி பிரியங்கா, லட்சுமியின் மருமகன் ஜானகிராமன் ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பிரியங்கா அளித்த புகாரின் பேரில் ஜானகிராமன், லட்சுமி ஆகியோா் மீதும், ஜானகிராமன் அளித்த புகாரின் பேரில் வசந்தராஜ், இவரது உறவினா் பிரபு ஆகியோா் மீதும் தெள்ளாா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.