திருமலை மலைப் பாதையில் விநாயக சதுா்த்தி
விநாயக சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் உள்ள ஸ்ரீ விநாயகா் கோயிலில் பக்தா்கள் சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி அளித்தனா். பின்பு இந்த நிகழ்வில் பக்தா்களுக்கு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதேபோல், திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் முதல் மலைப்பாதையில் உள்ள விநாயகா் கோயில் சிறப்பு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.