செய்திகள் :

தென்னாப்பிரிக்க சரணாலயத்தில் யானை தாக்கி தொழிலதிபர் பலி!

post image

தென்னாப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான விளையாட்டு சரணாலயங்களில் ஒன்றின் இணை உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எஃப்சி கான்ராடி யானை மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோசல் விரிகுடாவிற்கு அருகிலுள்ள 27 ஏக்கர் வனவிலங்கு புகலிடமான கோண்ட்வானா தனியார் விளையாட்டு சரணாலயத்தில் ஜூலை 22 அன்று இந்த சம்பவம் நடைபெற்றது.

39 வயதான கான்ராடி வனவிலங்கு ஆர்வலர். சுற்றுலா விடுதிகளிலிருந்து யானைகள் கூட்டத்தை வழிநடத்த முயன்றபோது, அவர் எதிர்பாராத விதமாக ஆறு டன் எடையுள்ள யானை ஒன்று கோண்ட்வானாவை தனது தந்தங்களால் குத்தி, பலமாகத் தாக்கி மிதித்துக் கொன்றது

அருகில் வனக்காப்பாளர்கள் கான்ராடியை காப்பாற்றி முதலுதவி செய்தனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானைகள் மீது அதீத அன்பு கொண்ட கான்ராடி யானைகளைப் புகைப்படம் எடுப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் அவர் விலங்கியல், விலங்கு ஆய்வுகள், வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் கௌரவப் பட்டம் பெற்றவர்.

அவருக்கு மனைவி லா-இடா(33) இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FC Conradie, the co-owner and CEO of one of South Africa’s most exclusive game reserves, was tragically killed after being trampled by an elephant while trying to guide the herd away from a tourist lodge.

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பி... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!

அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவிட அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.அமெரிக்காவைs சேர்ந்த மெட்டா நிறுவனம் தங்கள் சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன... மேலும் பார்க்க

வியட்நாமில் பேருந்து விபத்து: குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

வியட்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேர... மேலும் பார்க்க