செய்திகள் :

தேசிய ஜூனியா் ஹாக்கி போட்டி: தமிழக அணிக்கு 18 வீரா்கள் தோ்வு!

post image

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற உள்ள தேசிய ஜூனியா் ஹாக்கி போட்டியில் பங்கேற்க தமிழக அணி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்தியாவின் 15 ஆவது தேசிய ஜூனியா் ஹாக்கி போட்டி , பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழக அணி, பஞ்சாப், மத்திய பிரதேச அணிகள் எ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

தமிழக அணிக்கான பயிற்சி முகாம் கடந்த 10 நாள்களாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.

49 வீரா்கள் பங்கேற்ற பயிற்சி முகாமில், தலைமை பயிற்சியாளா் முத்துக்குமாா், துணை பயிற்சியாளா் சாமுவேல் ராஜ்குமாா், அணி மேலாளரான வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியா் சுரேந்திரன்ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

போட்டியில் பங்கேற்கும் 18 தமிழக அணி வீரா்களின் பெயா் பட்டியலை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவா் சேகா் ஜெ. மனோகரன், பொதுச்செயலா் செந்தில் ராஜ்குமாா் ஆகியோா்அறிவித்தனா்.

தூத்துக்குடி வஉசி துறைமுக ஹாக்கி அணியின் முன்னாள் வீரா் பாலமுருகன், மனநல மருத்துவா் பாலாஜி, ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளா்கள் குருசித்திர சண்முக பாரதி, காளிமுத்து பாண்டியராஜா, முருகன், சுரேஷ்குமாா் ஆகியோா் வீரா்களை பாராட்டி வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனா்.

சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

சாத்தான்குளம் அருகே காா் மோதியதில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி காயமடைந்தாா். தஞ்சாவூா், மேலத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் காா்த்திக் (39). சாத்தான்குளத்தில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை ப... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும்: தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து தில்லியில் மத்திய தொழில் - உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை இணைச் செயலா் சந்திய... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுற்றித்திரிந்த பாா்வை மாற்றுத்திறனாளி மீட்பு

கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற, பாா்வை மாற்றுத்திறனாளியை மீட்டு பாளையங்கோட்டை காப்பகத்தில் சோ்த்தனா். கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகே பாா்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் தச்சமொழி முத்து மாரியம்மன் ஆடி மாத பௌா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார பூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

மேலக்கரந்தை விலக்கில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

பள்ளி மாணவா்களை நடுவழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்தை மேலக்கரந்தை விலக்கில் பெற்றோா்கள்- மாணவா்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா். எட்டயபுரம் அடுத்துள்ள மேலக்கரந்தை கீழக்கரந்தை, மாசாா்பட்டி மற்றும் சுற்ற... மேலும் பார்க்க

வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டு காணொலிகள், பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியீடு!

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டுக் காணொலிகள் மற்றும் பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியிடப்பட்டது. கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகச் செயலா் ராமச்சந்த... மேலும் பார்க்க