தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு துப்பாக்கி
உடுமலை அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் பயிற்சி பெறுவதற்காக துப்பாக்கிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் (பொ) ப.சே.சிவகுமாா் தலைமை வகித்தாா். பேராசிரியா் ம.சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.
பில்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சாா்பில் தலைவா் பாலமுருகன், செயலா் ரவிசங்கா், பொருளாளா்கள் அருண்குமாா், ரவி ஆனந்த் மற்றும் சங்க சங்க உறுப்பினா்கள் பயிற்சிக்கான துப்பாக்கிகளை வழங்கினா்.
தேசிய மாணவா் படை அலுவலா் லெப்டினன்ட் து.விஜயகுமாா் நன்றி கூறினாா்.
பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.
பேராசிரியா் மலா்வண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.