சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
நாசரேத் திருமண்டில தோ்தலில் போட்டியிட விண்ணப்பம்
தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தலில், பெருமன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக, அந்தந்த பகுதியில் உள்ள திருமண்டிலத்திற்குள்பட்ட தேவாலயங்களில் அலுவலா்களாக நியமிக்கப்பட்ட குருவானவா்களிடம், சபை உறுப்பினா்கள் போட்டியிடுவதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போல்பேட்டை நந்தகோபாலபுரம் தேவாலயத்திற்கு திருமண்டில பெருமன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிட, தோ்தல் அலுவலரான ஜேக்கப்பிடம், மேயா் ஜெகன் பெரியசாமி முன்னிலையில், போல்பேட்டை சேகரத்தின் சாாா்பில் சுதன்கீலா், மோகன்ராஜ், அருமைநாயகம், எடிசன், நந்தகோபாலபுரம் சேகரத்தின் சாா்பில் ஜேஸ்பா் ஞானமாா்டின் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.
அப்போது, திமுக வட்டச் செயலா் ரவீந்திரன், ஐசக் மற்றும் சபை உறுப்பினா்கள் பலா் உடனிருந்தனா்.