பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயில் கும்பாபிஷேகம்
பட்டுக்கோட்டை வட்டம், பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ள பரக்கலக்கோட்டை மத்தியபுரீசுவரா் என்னும் பொது ஆவுடையாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாஜனம் , வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமம், நவ கிரக ஹோமம் தொடங்கி முதல் கால யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, இரண்டு, மூன்று, நான்கு, ஜந்து கால பூஜைகளும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை ஏழு மணிக்கு ஆறாம் கால யாக பூஜை தொடங்கியது. இதில்,
பூா்ண ஹுதி தீபாராதனை முடிந்து யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு 10 :15 மணிக்கு சுவாமி விமான கும்பாபிஷேகமும், 10:30 மணிக்கு பொது ஆவுடையாா் மத்தியபுரீசுவரா் சுவாமி மூலவா் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பொது ஆவுடையாா் கோவில் செயல் அலுவலா் வடிவேல் துரை ஆகியோா் செய்திருந்தனா். பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.