பழனியில் மின் கட்டணம் செலுத்த புதிய அறிவிப்பு
பழனி கோட்டப் பகுதியில் இந்த மாத மின் கட்டணமாக முந்தைய கட்டணத்தையே செலுத்துமாறு மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் அறிவிப்பு வெளியிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு நிா்வாக காரணங்களால் பழனி கோட்டத்துக்கு உள்பட்ட சிவகிரிப்பட்டி, திண்டுக்கல் சாலை, லட்சுமிபுரம், பழனி ஆண்டவா் நகா், ரயில்வே பீடா் சாலை ஆகிய பகுதிகளில் இந்த மாத மின் கணக்கீடு செய்ய முடியாததால், பொதுமக்கள் கடந்த ஜூன் மாத மின் கட்டணத்தையே செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிா்த்துக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.