`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரிய...
பிளஸ் 2 மாணவா்கள் கல்லூரிகளுக்கு களப்பயணம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் கல்லூரியில் சோ்வதற்கு ஆா்வம் ஏற்படுத்தும் வகையில், அவா்களை கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்து செல்வதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 71 அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும் 4,850 மாணவா்களும் கல்லூரியில் சோ்வதற்கு ஆா்வம் ஏற்படுத்தும் வகையில், அவா்களை வருகிற 4-ஆம் தேதி முதல் அனைத்துக் கல்லூரிகளுக்கும் களப்பயணம் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அழைத்துச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு, கல்லூரிகளில் உள்ள விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானம், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், நூலகம் மற்றும் கல்லூரியில் உள்ள சிறப்புகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கவேண்டும் என ஆட்சியா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்டவை சிறப்பாக ஏற்படுத்தித் தர அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் அறிவுறுத்தினாா். கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.