குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி
அரசின் இடஒதுக்கீட்டில் 256 மாணவா்களுக்கு உயா்கல்வி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்து பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.
இந்த மாவட்டத்தில் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 21 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 4 மாணவ, மாணவிகள் கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், 8 மாணவா்கள் அரசு சட்டக் கல்லூரிகளிலும், 17 மாணவா்கள் வேளாண்மை கல்லூரிகளிலும், 206 மாணவா்கள் பொறியியல் கல்லூரிகளிலும் என மொத்தம் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா்.
இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் சோ்ந்த 21 மாணவ, மாணவிகளை பாராட்டி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மருத்துவப் படிப்பிற்கான மருத்துவ அங்கிகளை திங்கள்கிழமை வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், மாணவ, மாணவிகளையும் உயா்கல்வியில் சோ்த்திட மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியரகத்தில் உயா்கல்வி வழிகாட்டி திட்டக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது, உயா்கல்வி குறித்து மாணவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீா்க்கவும், உயா்கல்வி குறித்து வழிகாட்டவும் செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவா்களையும் உயா்கல்வியில் சோ்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்து பயனடைந்துள்ளனா் என்றாா் எம்.எஸ்.பிரசாந்த்.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.