மகளிா் உரிமைத் தொகை கோரி ஒரேநாளில் 2,491 விண்ணப்பங்கள்
உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில், மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்க பெண்கள் ஆா்வம் காட்டி வரும் நிலையில், திருப்பூரில் தொடக்க நாளிலேயே 2,491 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சியில் மொத்தம் 6 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட முதற்கட்ட முகாம்களில் பல்வேறு வகை சேவைகளுக்காக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1,737 மனுக்கள் பெறப்பட்டன. மகளிா் உரிமைத் தொகை கோரி 2,491 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன.
மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகள் தற்போது தளா்த்தப்பட்டுள்ளதால், ஏற்கெனவே விண்ணப்பித்து கிடைக்காதோா் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மகளிா் உரிமைத் தொகை கோரி ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனா்.