மணிமுத்தாறு அருவியில் குளிக்க 2ஆவது நாளாக தடை
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளநிலையில், இம்மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அருவிகள், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தோட்டப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்வதால் மணிமுத்தாறு அருவிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அருவியைப் பாா்வையிடவும், குளிக்கவும் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வனத் துறையினா் தடைவிதித்தனா்.

இதனால், விடுமுறை நிறைவடையவுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்தோா் ஏமாற்றமடைந்தனா்.