முகாசி அனுமன்பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 3 ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, துய்யம்பூந்துறை ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
முகாசி அனுமன்பள்ளியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம்முகாமில், மகளிா் உரிமைத்தொகை உள்பட பல்வேறு சேவைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1,308 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 17 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சுமித்ரா, மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.
முகாமில், மொடக்குறிச்சி வட்டாட்சியா் சிவசங்கா், முன்னாள் ஊராட்சி தலைவா்கள் ஏ.பி.பெரியசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.