மெழுகுவா்த்தி ஏந்தி காங்கிரஸ் பேரணி
தோ்தல் ஆணையத்துக்கு எதிராக மெழுகுவா்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினா் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.
இந்த பேரணிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் து.மணிகண்டன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் பூச் சந்தை அருகிலுள்ள காமராஜா் சிலை வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, பிரதான சாலை வழியாக மேற்கு ரத வீதியில் நிறைவடைந்தது.
இந்தப் பேரணியின்போது, ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் தோ்தல் ஆணையத்தை கண்டித்தும் முழக்கமிட்டனா்.