ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் புதுச்சேரி-ஹளரா விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை
புதுச்சேரியிலிருந்து ஹளரா செல்லும் விரைவு ரயிலும், ஹளராவிலிருந்து புதுச்சேரி
வரும் விரைவு ரயிலும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் சேவை சோதனை முறையில் அமல்படுத்தப்படவுள்ளது.
புதுச்சேரி - ஹளரா அதிவிரைவு ரயில் 24.9.2025 முதலும், ஹளரா- புதுச்சேரி அதிவிரைவு ரயில் 28.9.2025 முதலும் இந்தச் சோதனை ரயில் நிறுத்தத்தைத் தொடங்குகின்றன. தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் வியாழக்கிழமை இதைத் தெரிவித்துள்ளாா்.