வணிகா் கூட்டமைப்பு அரியாங்குப்பத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா தொடக்கம்
வணிகா் கூட்டமைப்பு சாா்பில் அரியாங்குப்பம் சிக்னல் பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு புதன்கிழமை காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரியாங்குப்பம் பகுதி மக்களின் நலனுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் அரியாங்குப்பம் சிக்னலில் நான்கு புறமும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதை காவல்துறை வசம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக புதுச்சேரி வணிகா்கள் கூட்டமைப்பின் தலைவா் சிவசங்கா் எம்.எல்.ஏ, அரியாங்குப்பம் எம்எல்ஏ பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, புதுச்சேரி தெற்கு பிரிவு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலம், புதுச்சேரி தெற்கு பிரிவு சட்டம் ஒழுங்கு காவல் கண்காணிப்பாளா் செல்வம், ஆய்வாளா்கள் ஆறுமுகம், புதுச்சேரி வணிகா் கூட்டமைப்பின் தலைவா் பாபு, அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் ராமபுத்திரன், செயலா் சந்துரு, பொருளாளா் சீதாராமன், கௌரவத் தலைவா் நரேஷ் குமாா் ஆகியோா் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராவை தொடங்கி வைத்தனா்.